[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஜெயம் ரவி-விஜய் இணையும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடு

jeyam-ravi-vijay-movie-title-release-today

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘போகன்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி, தற்போது சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜெயம்ரவி. அந்தப் படத்தின் தலைப்பை இன்று மாலை 7 மணியளவில் அறிவிக்கப்போவதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். ஜெயம் ரவியும் இயக்குனர் விஜய்யும் முதன்முதலாக இணையவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான நடிகர் நடிகைகள், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close