[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

நாளை வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

movies-release-tomorrow

அட்டி, சென்னை- 600028 படத்தின் இரண்டாம் பாகம், பறந்து செல்ல வா ஆகிய திரைப்படங்கள் நாளை அதாவது டிச.9ல் வெளியாகவுள்ளது.

அட்டி

புதுமுக இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கத்தில் மா.கா.பா ஆனந்தின் ‘அட்டி’ படம் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு நாளை திரைக்கு வர இருக்கிறது. அஜீத் ரசிகராக மா.கா.பா ஆனந்த் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்விதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுந்தர்.சி.பாபு இசையமைத்துள்ளார்.

சென்னை 600028 (2)

வெங்கட் பிரவு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, வைபவ், சம்பத் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பறந்து செல்ல வா

தனபால் பத்பநாபன் இயக்கத்தில் நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘பறந்து செல்ல வா’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோஷுவா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேசன்ஸ்’ மூலம் இப்படத்தை வெளியிடவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Atti chennai 28 paranthu sella va
Advertisement:
Advertisement:
[X] Close