[X] Close

சென்னை: திருமணமான நான்கே மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

தமிழ்நாடு

Chennai-A-new-married-woman-committed-suicide-by-hanging-herself

சென்னையில் திருமணமாகி 4 மாதமான நிலையில் புதுமணப்பெண், வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் புனித அந்தோணியார் நகரை சேர்ந்தவர் லோகு பிரபாகரன். இவருக்கும் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும், இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்தியா 2 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிகிறது.

image


Advertisement

இந்நிலையில், படுக்கை அறையில் இருந்த சந்தியாவுக்கு அவரது மாமியார் ஈஸ்வரி காபி கொடுக்க கதவை தட்டியுள்ளார். அப்போது வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் மாமனார் சேகர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மின்விசிறியில் புடவையால் தூக்கிட்ட நிலையில், இருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு துக்கிச் சென்றதாக தெரிகிறது.

image

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் பெண்ணின் தாய், தந்தையருக்கு தகவல் தெரிவித்து நிலையில் சந்தியாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி நான்கு மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் சென்னை கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close