[X] Close

முதல் டோஸ் 30,32,165, 2-ம் டோஸ் 3,31,881 - தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

total-covid-vaccination-in-tamilnadu-till-today

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது? எந்த வயதினருக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரங்களை காணலாம்...


Advertisement

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. கோவின் செயலியில் உள்ள தகவல்களின்படி தமிழகத்தில் 3,845 அரசு மையங்கள் மற்றும் 1,004 தனியார் மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை தமிழகத்தில் 33,64,046 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 30,32,165 பேர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர். இவர்களில் 3,31,881 பேர் மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அதிகரிக்கும் என கூறுகிறார் மருத்துவர் சாந்தி.


Advertisement

image

தமிழகத்தை பொறுத்தவரை 15,26,228 ஆண்களும், 15,05,634 பெண்களும், 303 மூன்றாம் பாலினத்தவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். வயது வாரியாக பார்த்தால், 60 வயதுக்கு மேற்பட்ட 11,12,831 பேரும், 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 13,58,985 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 4,28,398 பேரும், 18 முதல் 25 வயது வரையிலான 1,30, 789 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close