Published : 04,Apr 2021 10:24 AM
"சத்தியமா உதயநிதியை வெற்றி பெற வைத்துவிடுவீர்களா?" - மு.க.ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயநிதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று இறுதிக்கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளார். துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயநிதிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது “சத்தியமா உதயநிதியை வெற்றி பெற வைத்துவிடுவீர்களா? உதயநிதிக்காக நான் பரப்புரை செய்யும்போது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தது நினைவுக்கு வருகிறது. தோல்வி பயத்தால் அதிமுக தலைவர்கள் உளறி வருகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு தக்க பதிலடி தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.