ஜி.எஸ்.டியை எதிர்த்த ஒரே தலைவி ஜெயலலிதா என சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளார் பிரபுவை ஆதரித்து ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி வாக்களித்தீர்கள். இதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடை பெறவில்லை. நடந்தெல்லாம் ஊழலும் நில அபகரிப்பும்தான். இவர்கள் செய்ய முடியாதவற்றை எல்லாம் சொல்லி உங்களை திசை திருப்புகிறார்கள். நீங்கள் உழைக்கும் வர்க்கம். சிந்தித்து செயல்படுங்கள்.
அதிமுகவை திருடன் என திமுக சொல்கின்றது. அதிமுகவோ, திமுகவை பரம்பரை திருடன் என்கிறது. 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். நம்ம இடத்தை போட்விட்டு ஊருக்கு போனால் திரும்பி வருவதற்குள் அங்க வேறு ஒருவர் வீடே கட்டியிருப்பார். எந்த ஊழலை எடுத்துக்கொண்டாலும் அதன் மையபுள்ளி கோபாலபுரத்தில்தான் இருக்கும். இப்படியெல்லாம் செய்து விட்டு இப்போது ஏதோ பழைய வீட்டுக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி வந்து நாங்க விடிவுகாலம் தருவோம் என்கிறார்கள்.
இவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவே இல்லை. அதற்குள் மணல் திருட நேரம் குறிக்கிறார்கள். இந்தியாவில் ஜி.எஸ்.டி யை எதிர்த்த ஒரே தலைவி ஜெயலலிதா. ஆனால் இன்றோ இவர்கள் டெல்லிக்கு போய் கைகட்டி நின்றுவிட்டு வந்து மக்களை திசை திருப்புகிறார்கள். மக்களே நீங்கள் ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த உண்மைகள் உங்களுக்கு புரியும். மாற்றத்திற்கு நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!