கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 35,871 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1,14,74,605 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 17,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,10,63,025 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 172 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரையிலான உயிரிழப்பு 1,59,216 ஆக உயர்ந்துள்ளது. 2,52,364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,71,43,255 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த 15 நாட்களில் 150 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ்பூஷன் தெரிவித்துள்ளார். மேலும், “பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 256 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல, ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர், கர்நல், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ரட்லம் பகுதியில் 500 சதவிகிதமும், குவாலியரில் 360 சதவிகிதமும், கார்கோன், உஜ்ஜயினிலும் தலா 250 சதகிதம் அளவிற்கும் தொற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்