Published : 17,Mar 2021 08:38 PM

ஷங்கரின் ’இந்தியன் 2’ தாமதமாக இதுதான் காரணம்! - காஜல் அகர்வால் சொன்ன விளக்கம்

Kajal-Aggarwal--reveals-the-reason-behind-the-delay-in-resuming-Indian2-shoot

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த’இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானிஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ பட ஷூட்டிங்கில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதோடு, கொரோனா ஊரடங்கும் ஏற்பட்டதால் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் படக்குழு அமைதி காத்தது. நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்தார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் தற்போது இணைந்துள்ளார்.

image

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த ஒரு சந்திப்பில் நடிகை காஜல் அகர்வாலிடம் ’இந்தியன் 2’ படம் ஏன் நிறுத்தப்பட்டது என்று நடிகை காஜல் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, காஜல் அகர்வால் “இந்தியன் 2 படத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவுக்கு வந்து அவர்களால் பணிபுரிய முடியவில்லை. அதனால்தான், ’இந்திய 2’படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்