[X] Close

“நன்றி விஜய் அண்ணா! நன்றி விஜய்சேதுபதி அண்ணா” மாஸ்டர் 50வது நாள் குறித்து லோகேஷ் ட்வீட்

சினிமா

Lokesh-tweets-about-Master-50th-day

மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களில்  50 வது நாள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் – விஜய் சேதுபதிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லியுள்ளார்.

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். தீபாவளியையொட்டி தியேட்டர்களில் மாஸ்டர் வெளியானது. கொரோனா சூழலில் தியேட்டர்களில் வெளியான படங்களில் மாஸ்டர் மட்டுமே வசூலைக் குவித்ததாக தியேட்டர்கள் தரப்பினர் கூறுகிறார்கள்.

image


Advertisement

தற்போதுவரை, மாஸ்டர் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று படம் வெளியாகி 50 வது நாள் ஆவதையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,


Advertisement

“எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதுமானதாக இருக்காது. நன்றி விஜய் அண்ணா.. நன்றி விஜய் சேதுபதி அண்ணா” நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதோடு, மாஸ்டர் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமளித்திருக்கிறார். 


Advertisement

Advertisement
[X] Close