Published : 18,Feb 2021 05:38 PM
சையத் அலி கோப்பையில் அதிரடி - 5.25 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் ஷாருக்கான்

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவரது அடிப்படை விலை 20 லட்ச ரூபாய் ஆகும். அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணியில் விளையாடி இருந்தார் ஷாருக். இறுதி போட்டியில் 7 பந்துகளில் 18 ரன்களை அடித்து அமர்க்களப்படுத்தி இருந்தார் ஷாருக். அதில் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
அதோடு அந்த தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி அவர் 12, 18, 40 மற்றும் 18 என நான்கு இன்னிங்ஸில் ரன்களை எடுத்துள்ளார். இதில் முதல் இன்னிங்க்ஸை தவிர மற்ற மூன்று இன்னிங்ஸிலும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக அவர் களத்தில் இருந்தார். அதன் மூலம் அந்த தொடரின் சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் 220.0 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடம் பிடித்தார்.
Shahrukh Khan earns big and how! ?
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
He joins @PunjabKingsIPL for INR 5.25 Cr. @Vivo_India#IPLAuctionpic.twitter.com/uHcOJ7LGdl
அப்போதே ஷாருக்கானை இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும் என சொல்லப்பட்டது. அது இப்போது பலித்துளளது. டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டின. இறுதியில் பஞ்சாப் அணி அவரை பிக் செய்தது.