Published : 16,Feb 2021 11:16 AM
2009 மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

2009ல் நடந்த மக்களைவை தேர்தலில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ல் நடந்த மக்களைவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். முடிவில் ராஜகண்ணப்பனை ப. சிதம்பரம் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு ப. சிதம்பரத்தின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தார்.