[X] Close

இந்திய கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள்தான் - ரவி சாஸ்திரி!

விளையாட்டு

Indian-players-need-a-break-from-cricket-says-Head-Coach-Ravi-Shastri

இந்திய கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் ஓய்வு வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.

image


Advertisement

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி "கிரிக்கெட்டிலிருந்து ஒரு சிறிய இடைவெளி அதாவது ஓய்வுக்காலம் ஒவ்வொரு வீரருக்கும் கட்டாயம் என்பதை நான் திடமாக நம்புகிறேன். இப்போது இங்கிலாந்து தொடருக்கு பின்பு மீண்டும் ஐபிஎல். அப்போது ஐபிஎல் முடிந்த பின்பு வீரர்களுக்கு குறைந்தது 2 வாரம் ஓய்வுக்காலம் அவசியம். இந்தக் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நாட்கள் வீரர்களை மனதளவில் பாதிக்க செய்கிறது. நாம் எல்லோரும் மனிதர்கள்தான் கிரிக்கெட் வீரர்களும் அப்படிதான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும்போது கிடைக்கும் பெருமை எல்லாம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். இங்கு ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் முக்கியமானது. அதேபோல கிரிக்கெட்டின் ஒவ்வொரு பார்மெட்டும் முக்கியமானது. இந்திய அணியை பொறுத்தவரை பல நல்ல வீரர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அந்த வீரர்கள் எல்லாம் ஒவ்வொரு பார்மெட்டுக்கும் ஏற்ப இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாய்ப்புக்காக பசியோடு காத்திருக்கிறார்கள்" என்றார் ரவி சாஸ்திரி.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close