Published : 16,Jul 2017 03:20 AM

தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் மழை!

Rain-in-Tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘தென்மேற்கு பருவ மழை தமிழக பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து இன்றும் மழை நீடிக்கும். குறிப்பாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்