பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா பார்வையாளர்களை சந்திக்க தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்துறை செயலாளருக்கு அவர் புதிதாக அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், சசிகலா தங்கியுள்ள அறையின் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டது. சசிகலா பார்வையாளர்களை சந்திப்பதற்காக 5 நாற்காலிகளுடன் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரப்பன அக்ரஹார சிறையின் 7 மற்றும் 8ம் எண் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறியிருக்கிறார்.
முன்னதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் தனது ஆய்வு அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு அனுப்பினார். அதில், சசிகலாவுக்கு தனி சமையல் அறை உட்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக டி.ஜி.பி சத்தியநாராயணரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவதாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதை டி.ஜி.பி மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்