Published : 15,Jul 2017 03:06 AM
பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எந்தந்த கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு என்றைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்பதை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான அட்டவணை தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 17ஆம் தேதி தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது, மாற்றுத் திறனாளிகளுக்கு 19 ஆம் தேதியும், விளையாட்டுப் பிரிவினருக்கு 21ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 23 ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.