[X] Close

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு WWE அளித்த சிறப்புப் பரிசு 

WWE-s-special-gift-to-Mumbai-Indians-team

 

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு WWE அமைப்பின் முதன்மை செயல் இயக்குனரும், மல்யுத்த வீரருமான ட்ரிபிள் ஹெச் (Triple H) சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த முடிந்த பத்தாவது ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்த ட்ரிபிள் ஹெச், இதற்காக சிறப்பு பரிசு ஒன்று WWE சார்பில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 


Advertisement

இந்த நிலையில், அந்த சிறப்பு பரிசு என்னவென்று ட்ரிபிள் ஹெச், சமூகவலைதளம் மூலமாக அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோவுடன் கூடிய சிறப்பு WWE சாம்பியன்ஸ் பெல்ட் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளதாக ட்ரிபிள் ஹெச் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close