சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. அதற்கு காரணம் அவரது ஆட்டத்தின் அணுகுமுறை. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
கடந்த 2013 இல் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 158 பந்துகளில் 209 ரன்களை விளாசி இருந்தார். இது தான் ஒருநாள் போட்டியில் அவர் முதன் முதலில் பதிவு செய்த இரட்டை சதம். தொடர்ந்து 2014 இல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 173 பந்துகளில் 264 ரன்களை எடுத்திருந்தார். அதோடு கடந்த 2017 இல் இதே நாளில் இலங்கை அணிக்கு எதிராக 153 பந்துகளில் 208 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
A THIRD DOUBLE CENTURY IN ODIs ???#OnThisDay in 2017, Rohit Sharma smashed an unbeaten 208 with 13 fours and 12 sixes against Sri Lanka in Mohali ? pic.twitter.com/x8GQdwHyiS — ICC (@ICC) December 13, 2020
ஐபிஎல் தொடரின் போது காயத்தினால் அவதிப்பட்ட ரோகித் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படாத நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேர்வாகியிருந்தார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய அணியுடன் இணைய உள்ளார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 2 போட்டியில் ரோகித் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்