[X] Close

நேற்று ரஜினியின் தளபதி, இன்று கமலின் சிகப்பு ரோஜாக்கள் - வைரலாகும் ஸ்டார் படத்தின் போஸ்டர்

சினிமா

Harish-Kalyan-resembles-Kamal-Haasan-in-Star-second-look

தளபதி பட ரஜினி லுக்கில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இன்று கமலின் சிகப்பு ரோஜாக்கள் பட கமல் லுக்கில் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான‘பியார் பிரேமா காதல்’திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தயாரித்து இசையமைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

image


Advertisement

இந்தக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான நேற்று, அவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் “ஸ்டார்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், தளபதி பட ரஜினி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் தோன்றியிருந்தார். இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இன்று கமலின் "சிகப்பு ரோஜாக்கள்" கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் தோன்றியிருக்கும் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

image

ஸ்டார் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close