[X] Close

பேரவைத் தேர்தல் பணி... அதிமுக வரும் 14-ஆம் தேதி ஆலோசனை

தமிழ்நாடு,தேர்தல் களம்

ADMK-holds-meeting-on-Dec-14

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு, மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

image


Advertisement

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 14ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close