[X] Close

சென்னை: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களை ஆபாசமாக பேசிய பெண்ணுக்கு சிறை

குற்றம்

Woman-jailed-for-talking-obscenely-to-police

சென்னை திருவான்மியூரில் காவல்துறையினரை ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.


Advertisement

திருவான்மியூரில் வாகன தணிக்கையின்போது சேசு பிரசாத் என்பவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அதனால், வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்ய போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் முயன்றார்.

image


Advertisement


அப்போது, மதுபோதையில் வந்த நபருடன் காரில் இருந்த காமினி என்ற பெண் காவலர்களை ஆபாசமாக பேசி வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, காவலர்களை அந்த பெண் காலால் எட்டி உதைத்தார்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் கொடுத்த புகாரில், இருவர் மீதும் திருவான்மியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மதுபோதையில் வந்த சேசுபிரசாத்தை பிணையில் விடுவித்த நீதிபதி காவலர்களை ஆபாசமாக பேசிய பெண்ணை 14 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close