Published : 04,Dec 2020 02:13 PM

ரஜினியுடன் கூட்டணியா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

jayakumar-speech-about-ops-speech-on-rajini

ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் பேசியது அவருடைய கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

image

இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமையும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் பேசியது அதிமுகவின் கருத்து அல்ல எனவும் அது அவரது சொந்த கருத்து எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்