கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது முகக்கவசத்தை கழற்றிய பின்னர் மக்களிடம் உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வெள்ளை மாளிகையில், தனது ஆதரவாளர்கள் முன்பாக உரையாற்றியபோது முகக்கவசத்தை அகற்றினார். "முதலில், நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது" என்று ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். “ட்ரம்ப் சனிக்கிழமையன்று கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார். அவரால் இனி மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் ஆபத்து இல்லை” என்று அவரது மருத்துவர் சீன் கான்லி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ட்ரம்பும் அவரது நிர்வாகமும் கொரோனா தொற்றுநோயை கையாண்ட விதம்பற்றிய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே போல் வெள்ளை மாளிகையில் முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றிலுள்ள தளர்வான அணுகுமுறை காரணமாக, ட்ரம்பின் நெருங்கிய உதவியாளர்களில் 11 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடனை எதிர்கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தொற்று காரணமாக சில நாட்களாக பரப்புரையில் ஈடுபட முடியாமல் இருந்தார். தற்போது பிரச்சாரத்தை தொடங்க ஆர்வத்துடன் உள்ள அவர், புளோரிடா, பென்சிவேனியா, அயோவா என்று தொடர்ச்சியான பிரச்சார திட்டத்தை வைத்துள்ளார். அண்மையில் நடந்த நேர்காணல்களில் தொண்டை அலர்ஜி அறிகுறியின் காரணமாக ட்ரம்ப் வழக்கத்தை விட குறைவான பிரச்சார உரையை நிகழ்த்துகிறார்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள கொரோனா வைரஸால், இதுவரை 2,13,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?