ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பதிவு செய்துள்ளன. அதனால், மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடின.
நட்சத்திர வீரர்கள் ஸ்மித் மற்றும் சாம்சன் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடி காட்ட தொடங்கிய பட்லர் 22 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த உத்தப்பாவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இளம் வீரர் லாம்ரோர் நிலைத்து விளையாடி 47 ரன்களைக் குவித்தார். கீழ்வரிசையில் வந்த திவேதியாவும், ஆர்ச்சரும் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது.
155 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி, சிறப்பாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல்லும் பின்ச்சும் களமிறங்கினர். ஆனால் கோபால் வீசிய ஓவரில் பின்ச் அவுட் ஆனாலும் அடுத்து இறங்கிய கோலி நிதானமாக ஆடினார்.
படிக்கல் - கோலி கூட்டணி வெற்றிக்கூட்டணியாக மாறியது. 45 பந்துகளுக்கு 63 ரன்கள் குவித்து படிக்கல் அவுட் ஆனார். ஆனால் விராட் கோலி கடைசி வரை நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 19.1 ஓவரிலேயே ஈசியாக இலக்கை எட்டியது பெங்களூரு அணி. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?