அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. பிப்ரவரி 2021 க்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது. பிறகு கொரோனா தாக்குதல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வலிமை படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. பிப்ரவரி 2021 க்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.
அஜித்தின் வலிமை திரைப்படம் முதலில் 2020 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அது இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹெச். வினோத்துக்கு இப்போது 'வலிமை' படப்பிடிப்பை முடிக்க 50-60 நாட்கள் தேவை, அதில் அஜித்தின் பகுதிக்கு கிட்டத்தட்ட 30 நாட்கள் தேவை. இப்போது, அஜித் ஜனவரி 2021 க்குள் 'வலிமை' படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்றும், அவர் தனது பகுதிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு பிறகு அடுத்த படத்திற்கான பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நடிகர் அஜித் தனது 61 வது படம் பற்றி ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், அஜித்தின் 61 வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார் என்றும், இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி “ இதுபற்றிய எந்த திட்டத்திலும் கையெழுத்திடவில்லை”என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் இதுகுறித்து இயக்குனர் சுதா கொங்கரா எதுவும் கருத்து கூறவில்லை.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!