[X] Close

குத்துச்சண்டை: தோல்வியே சந்திக்காத மேவெதரை எதிர்கொள்ள கிரிகோர் கடும் பயிற்சி!

McGregor--posted-training-Videos

தொழில்முறை குத்துச்சண்டையில் மேவெதரை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருவதாக அயர்லாந்து வீரர் கிரிகோர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சியை, இணையதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மேவெதர், தொழில்முறை குத்துச்சண்டையில் தான் பங்கேற்ற 49போட்டிகளில்  அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இவரை எதிர்த்து 28 வயதான கிரிகோர் மோதிகிறார். இவர் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளார். கிரிகோர் - மேவெதர் இடையிலான குத்துச்சண்டைப் போட்டி, அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப்போட்டிக்காக தான் தயாராகி வரும் வீடியோ காட்சியை, இணையதளத்தில் கிரிகோர் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close