[X] Close

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் தடுப்பணை: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை!

மாவட்டம்

Kodaikanal--Request-to-the-dam-collector-to-reclaim-the-swamp-land----

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியின் அல்லி ஓடையில் உள்ள அல்லிக்குளம், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, தடுப்பணையில் நீர் தேங்கவிடாமல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில், சின்னப்பள்ளம் பகுதியில் ஓடும் அல்லி ஓடையில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நீர் பிடிப்பு சதுப்பு நிலம் உள்ளது. அல்லிக்குளம் என அழைக்கப்படும் இந்த சதுப்பு நிலத்தில், நீரை தேக்கி, வில்பட்டி கிராமத்தின் ஒரு பகுதிக்கு, குடிநீர் கொண்டு செல்ல ரூபாய் பத்து லட்சம் செலவில் 2012 ஆம் ஆண்டு, தடுப்பணை கட்டப்பட்டது.

image
கட்டிய நாளில் இருந்து, இன்றுவரை அந்த அணையில் நீர் தேங்கவிடாமல், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அணையில் கசிவை ஏற்படுத்துவதாகவும், மேலும் சதுப்பு நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, வேலி போட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.


Advertisement

image
இதனை பல முறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை என்று கூறும் அப்பகுதி மக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சதுப்பு நிலத்தை தூர்வாரி, குடிமராமத்து செய்து, அல்லிக்குளத்தில் நீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close