[X] Close

தோனி வாங்கியுள்ள வின்டேஜ் கார்: சாக்‌ஷி பகிர்ந்த புகைப்படம்!

இந்தியா,விளையாட்டு

MS-Dhoni-Adds-Pontiac-Firebird-Car-in-his-collection

மோட்டார் வாகனப் பிரியரான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல விலை உயர்ந்த கார்களையும், மோட்டார் பைக்குகளையும் அவர் வீட்டு கெராஜில் சேகரித்து வைத்துள்ளார்.

image

சமயங்களில் அதில் ஜாலி ரைட் செய்து அந்த படங்களை தோனி பகிர்வதும் உண்டு. 


Advertisement

ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜெரோ, ஜி.எம்.சி சியரா பிக்-அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் என பல கார்களை வைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக வின்டேஜ் காரை தோனி வாங்கியுள்ளார்.

image


Advertisement

சிகப்பு நிறத்தில் உள்ள அவர் வாங்கியுள்ள ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் காரில் வெள்ளை நிறத்தில் பேட்டர்ன் இடம் பெற்றுள்ளது. 

தோனி டிரான்ஸ் ஆமின் செகென்ட் ஜெனரேஷன் மாடலை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறித்து. 

இந்த காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை தோனியின் மனைவி சாக்ஷி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

image

வி 8 எஞ்சின் மூலம் இயங்குகிற இந்த காரில் 365 பிஹெச்பி ஆற்றல் கொண்டது. 4 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை சுமார் 68 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வு முடிவை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிரியா விடை கொடுத்து வருகின்றனர். 

 


Advertisement

Advertisement
[X] Close