[X] Close

சத்யராஜ் நடிக்கும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

Sathyaraj-in-MGR-s-biopic

அரசியலிலும், திரைத்துறையிலும் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இப்போதும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது அவரது வழக்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


Advertisement

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கிய பாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ எம்ஜிஆர் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எம்.ஜிஆர் படத்தில் நடிக்க சத்யராஜ் மட்டுமே பொருத்தமாக இருப்பார். தற்போது கதை பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறோம். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்; என அவர் தெரிவித்தார்.  சத்யராஜ் ஏற்கெனவேஎ பெரியார் வாழ்க்கை வரலாறில் நடித்திருந்தார். 


Advertisement

Advertisement
[X] Close