Published : 25,Jun 2017 08:16 AM
லேப்டாப் வடிவில் புதிய ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் ஸ்டோர் ஒன்றை சிகாகோ நகரில் நிறுவுகிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஒரு ஸ்டோர் திறப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அதற்காக உருவாக்கப்படும் கட்டடம் தான் வியப்பில் ஆழ்த்துகிறது. இக் கட்டிடத்தின் மேற்பகுதியில் தனது மேக்புக் ப்ரோ தோற்றத்தில் பிரமாண்டமான லேப்டாப் ஒன்றையும் வடிவமைத்துள்ளது. இதை பறவை பார்வையில் வானில் இருந்து பார்த்தால் பிரம்மாண்டமாகத் தெரியும்.
ஐ-போனோ, ஐ- பேடோ அல்லது லேப்டாப்போ, ஆப்பிள் நிறுவனம் என்றால் தனி மவுசு தான். அத்தகைய பேர் போன நிறுவனமான ஆப்பிள் மெக்சிகன் அவெனியில் இருந்த ஆப்பிள் ஸ்டோரை, சிகாகோ ஆற்றின் வடக்கு கரை அருகே மாற்றியுள்ளது. கடையின் மேற்புறத்தில் உலோகத்தினால் ஆக்கப்பட்ட கூரையில் லேப்டாப் வடிவத்தில் ஆப்பிள் லோகோவுடன் பிரமாண்ட கட்டிடத்தை உருவாக்கியுள்ளது. லேப்டாப்பின் மேற்பகுதி, கீழ்பகுதி என இரு தளங்களைக் கொண்ட கட்டடமாக வடிவமைத்துள்ளனர். இந்த ஆப்பிள் ஸ்டோர் 20,000 சதுர அடிகளை உடையது.