Published : 24,Jun 2017 02:39 AM

மெக்காவில் பயங்கரவாதிகள் திடீர் அட்டாக்

Saudi-security-forces-foil-suicide-bomb-attack-on-Mecca-s-Grand-Mosque

இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஏராளமானோர் கூடி தொழுகையில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, 
தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் மசூதியில் நுழைய முற்பட்டுள்ளான். இதனை கண்ட பாதுகாப்பு படையினர் அவனை தடுத்தபோது, அவன் கொண்டுவந்த குண்டுகளை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.  பயங்கரவாதி வெடிக்க செய்த குண்டு வெடிப்பில் அங்கிருந்த 5 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் காயமடைந்தனர். 

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்