Published : 23,Jun 2017 03:58 PM

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

highcourt-advices-to-tn

மது விற்பனை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தருணம் இது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போது நீதிபதி கே ரவிச்சந்திரபாபு இவ்வாறு தெரிவித்துள்ளார். மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என மதுப்புட்டிகள் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மக்கள் நலனுக்காகத்தான் மதுக்கடை அமைக்கிறோம் எனக்கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மக்களின் வாழ்வைக் கெடுத்து வருமானம் ஈட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மது விற்பனை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தருணம் இது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்