தூத்துக்குடியில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்கு மரக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ந்தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜை போலீசார் திட்டியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பென்னிக்ஸ் போலீசாரிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இதனால் பென்னிக்ஸுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் 21-ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 22-ந்தேதி இரவு திடீரென பென்னிக்ஸ் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜும் அதிகமான காய்ச்சல் காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து விசாரணைக் கைதி இருவரும் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்து இருப்பதாகாவும், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூய்மைப் பணியாளரை தரக் குறைவாக நடத்திய வீட்டு உரிமையாளர் (வீடியோ)
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்