Published : 17,Jun 2017 03:43 PM

"காசை மிச்சப்படுத்த நினைச்சதால் மொத்தமும் போச்சு..."

Reason-behind-London-fire

லண்டனில் நடைபெற்ற பெரும் தீவிபத்திற்கு தரக்குறைவான தீயணைப்பு அலார சாதனங்கள் பயன்படுத்தியதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் 27 மாடிக்கட்டிடம் மொத்தமும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில் கட்டடத்தில் உள்ள தீயணைப்பு அலாரம் தரம் மற்றும் விலைக்குறைவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டுள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் உண்மை விலை 6ஆயிரம் யூரோக்கள் என்ற நிலையில் சில நூறு யூரோக்களை மிச்சப்படுத்த தரக்குறைவான சாதனத்தை ஒப்பந்ததாரர்கள் கட்டடத்தில் பொருத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில்போட்டி காரணமாக இந்த ஒப்பந்ததாரர் குறைந்த விலைக்கு கட்டட ஒப்பந்தத்தை எடுத்ததும், அந்த இழப்பை சீர்செய்ய விலைக்குறைந்த பொருட்களை கட்டடத்தில் நிறுவியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஆசைப்பட்டதால் 58 அப்பாவி மக்கள் அநியாயமாக பலியானார்கள். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்