சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியாவை பழிதீர்க்க இறுதிப் போட்டியை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முதல் போட்டியில் இழந்த பெருமையை மீட்க நமக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த போட்டியில் அடைந்த தோல்வி மனவலியைத் தந்தது. டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணியே முதலில் பேட் செய்ய வேண்டும். இந்திய அணிக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது. இந்திய அணி சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்தால், மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்து, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். மற்ற அணிகளுக்கு எதிராக சேசிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் வியூகம் கைகொடுத்திருக்கலாம், ஆனால் அந்த வியூகம் இந்திய அணிக்கு எதிராக எடுபடாமல் போகலாம் என்பதே எனது கணிப்பு என்று அவர் கூறியுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 4ம் தேதி நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!