[X] Close

மே 12 முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம் !

இந்தியா

Indian-railways-begins-operations-from-may-12

மே 12 ஆம் தேதி முதல் படிப்படியாகப் பயணிகள் ரயில்களை உரியப் பாதுகாப்புடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

image

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.


Advertisement

image

இந்நிலையில் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் இயக்கப்படும். பயணச் சீட்டு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ரயில் நிலையிலும் உடல் பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement
[X] Close