[X] Close

இந்தியாவில் மக்களின் நடமாட்டம் சுமார் 80 % குறைந்தது - தரவுகளைப் பகிர்ந்த கூகுள்

கொரோனா வைரஸ்

According-to-data-from-Google--the-number-of-people-activities-has-dropped-by-about-80--during-the-curfew-in-India

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், மக்களின் நடமாட்டம் சுமார் 80 சதவிகிதம் அளவிற்குக் குறைந்துள்ளதாகக் கூகுள் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Advertisement


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு, மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அறியும் பொருட்டு மக்கள் நடமாட்டம் குறித்த தரவுகள், செல்ஃபோனில் உள்ள ஜி.பி.எஸ் கருவி மூலமாக திரட்டப்பட்டது.

 


Advertisement

UP man defies lockdown to host party on son's birthday, booked ...

இந்த தரவுகளை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை விட, ஊரடங்கு காலத்தில் நடமாட்டம் சுமார் எண்பது சதவிகிதம் அளவிற்குக் குறைந்ததாகத் தெரிவித்துள்ளது. உணவகங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை சுமார் எண்பது சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 


Advertisement

India's economy risks a COVID-19 induced contraction | Markets ...

ஊரடங்கு காலத்தில், பொது போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தும் எண்ணிக்கை 69 % சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, மளிகைக் கடைகள், பூங்காக்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சுமார் ஐம்பது சதவிகிதம் குறைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை அதிகமானதால், அலுவலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் முன்பைவிட 64 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூகுளின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement
[X] Close