Published : 08,Jun 2017 12:07 PM
தினமும் பெட்ரோல் விலை நிர்ணயம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலை நிலவர அடிப்படையில் தினம்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை முயற்சியாக, பெட்ரோல்-டீசல் விலை ஏற்கனவே நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை.