தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவராக டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் என நேற்று அறிவித்தார். எனவே பேரவைக் கூட்டத்தொடர் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
ஜூலை 1 ஆம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், விரைவில் தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தார். இதனால் ஜிஎஸ்டி மசோதா குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் 5வது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி