10,11,12 ஆம் வகுப்பு 2018 பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்பு 2018 பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு
10,11,12 ஆம் வகுப்பு 2018 பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு

நடப்பு ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன்னரே, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வுக்கு தயாராகும் வகையில், 2018ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவடையும். இதன் முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடையும். இதன் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com