Published : 05,Feb 2020 12:28 PM

விஜய் படத்தில் வில்லனாக நடிப்பது ஏன் ? விஜய் சேதுபதி ஓபன் டாக்

why-acted-villain-to-vijay-in-master-movie---vijay-sethupathi-talked

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாநகரம் படம் மூலம் கவனத்தை ஈர்த்து, கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மூலம் பெரிய அளவில் பிரபலமான லோகேஷ், விஜய், விஜய் சேதுபதி என இருவரையும் வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில், மக்கள் செல்வன் என அழைக்கப்படும் ஹீரோ விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனானது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

image


நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை திடீர் விசாரணை - பின்னணி என்ன? 


இது குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்தது. ஆனாலும் பேட்ட படத்தில், ரஜினிகாந்த் உடன் சேர்ந்து விஜய் சேதுபதி நடித்திருந்தார். அப்படத்தின் விழா ஒன்றில் பேட்ட படத்தில் நீங்கள் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். “சூப்பர் ஸ்டாரை எதிர்த்தாதானே நாம பெரிய ஆள் ஆக முடியும்” என வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதை உறுதி செய்தார். அதே போல் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்திலும் ஹீரோ அல்லாத ஒரு ரோலில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

image


குடிநீர் பைப்பில் வந்த மது - கேரளாவில் அதிர்ச்சி 


இந்நிலையில், பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர் “எனக்கு ஹீரோ, வில்லன் இமேஜ் பற்றியெல்லாம் கவலை இல்லை. லோகேஷ் கனகராஜ் இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய போது எனக்கு பிடித்திருந்தது” என்றார். மேலும், “நெகட்டிவ் ரோல் என்பதற்காக மாஸ்டர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பை இழக்க விரும்பவில்லை” என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்