[X] Close

தவான், கே.எல்.ராகுல் அரைசதம் - இந்திய அணி 201 ரன் குவிப்பு

விளையாட்டு

3rd-T20I---India-Posted-201-6-in-20-Overs-Against-Sri-Lanka

இலங்கை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.


Advertisement

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

image


Advertisement

இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தவான் 52(36), கே.எல்.ராகுல் 54 (36) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

image

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 6, ஸ்ரேயாஸ் 4, விராட் கோலி 26, வாஷிங்டன் சுந்தர் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் மணிஷ் பாண்டே நிலைத்து நின்று ஆடினார். ஷர்குல் தாக்கூரும் தன் பங்கிற்கு கடைசியில் அதிரடி காட்டினார்.


Advertisement

image

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 18 பந்துகளில் 31 ரன்களும், ஷர்குல் தாக்கூர் 8 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் சண்டகன் மூன்று விக்கெட் சாய்த்தார். இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close