Published : 30,Dec 2019 09:51 AM

ஓட்டுக்கு ஒரு மூட்டை அரிசி? வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததாகப் புகார்

rice-for-one-vote-in-tiruvannamalai-sevur

திருவண்ணாமலை மாவட்ட ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு மூட்டை அரிசி பரிசாக வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

அதிமுக சார்பில் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினராக கெளரி ராதாகிருஷ்ணன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜீவா சம்பத், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு தருமம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து, ஒரு வீட்டுக்கு ஒருமூட்டை அரிசியை அன்பளிப்பாக கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

image

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரகுநாதபுரத்திலுள்ள அரிசி ஆலையில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் - தமிழக அரசு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்