Published : 20,Nov 2019 08:56 AM

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு?- தமிழ்நாடு அரசு திட்டம்

TN-government-plans-special-entrance-for-Guest-Lecturers

தமிழகம் முழுவதும் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களாக நியமிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான சிறப்புத் தேர்வு மூலம் இவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

பணி அனுபவம் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் கூடிய அரசாணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 4054 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த கோரி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்