[X] Close

’காலா’ பட ஹீரோயின்.. 29 வயது அஞ்சலி படேல்

kaala-flim-herione-Anjali-Patil

பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ள ’காலா’ படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவதாக ஐஸ்வர்யா முதல் கஜோல் வரை பல்வேறு நடிகைகளின் பெயர் அடிபட்டு வந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஹிந்தி நடிகையான அஞ்சலி படேலுக்கு அடித்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம். தெலுங்கு, கன்னடா, மராத்தி மற்றும் சிங்கள மொழி படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் அஞ்சலி படேல். தெலுங்கு படமான படமான ’ந பங்காரு தல்லி’படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2013ம் ஆண்டு தேசிய விருதை வென்றவர். 2011 ஆம் ஆண்டு திரைத்துறையில் 29 வயதான அஞ்சலி படேல் இதுவரை பல்வேறு மொழிகளில் 15 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முதல் படமான ’காலா’ அவருக்கு 16வது படம்.

இந்தப்படத்தில் நடிப்பது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இந்தாண்டு அடுத்த படம் தி ஒன் அண்ட் ஒண்லி தலைவாவுடன்’ என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close