விருத்தாசலத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிய குடும்பம் புளியமரம் விழுந்ததில் காயமடைந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த இளங்கோவன் (47), அவரது அண்ணன் பரமசிவம் (67) ஆகியோர் குடும்பத்துடன் காரில் சென்றனர். குருபெயர்ச்சியை முன்னிட்டு இந்த ஆன்மிகப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய அவர்கள், கோமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது.
இதில் காரில் இருந்த பரமசிவம் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். காரில் இருந்த மற்ற 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விபத்தில் காயமடைந்த பரமசிவத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கார் மீது கிடந்த புளியமரத்தை தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்