[X] Close

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன?

maharashtra-assembly-election-2019

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 

நவம்பர் மாதம் 9ஆம் தேதியுடன் அம்மாநிலத்தில் ஆட்சியிலுள்ள பாஜக -சிவசேன கூட்டணி அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 288 தொகுதிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிராவில் எட்டு கோடியே 95 லட்சத்து 62 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர். 

இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களில் 1960ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்த எட்டு தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. 1995ஆம் ஆண்டு நடந்த 9ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் சிவசேனா தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. 


Advertisement

இதையடுத்து கடந்த 2004ம் ஆண்டு வரை நடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா முதன்முறையாக ஆட்சி அமைத்தது. 122 இடங்களில் பாஜகவும் 63 இடங்களில் சிவசேனாவும் கைப்பற்றி ஆட்சியை அமைத்தன. இதேத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 42 இடங்களையும், அக்கட்சியில் இருந்து பிரிந்த தேசியவாத காங்கிரஸ் 41 இடங்ளையும் பிடித்து தோல்வியடைந்தன. 

இம்முறை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி, கூட்டணி முடிவானது. அதன்படி 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளில், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளிலும், மீதமுள்ள 38 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. 


Advertisement

பாஜக, சிவசேனா முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. மொத்தம் 288 தொகுதிகளில் பாஜக 152 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களில் போட்டியிடுகிறது. இதர கட்சிகளுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close