விவசாயிகளுக்கு ரூ.403.79 கோடி இழப்பீடு

விவசாயிகளுக்கு ரூ.403.79 கோடி இழப்பீடு
விவசாயிகளுக்கு ரூ.403.79 கோடி இழப்பீடு

2015-16 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு 403 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2015-16 ஆண்டில் சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் பாதிப்படைந்தது. அதில் பயிர்காப்பீடு செய்து மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 96 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 403 கோடியே 79 லட்சம் கணக்கிடப்பட்டது. இதையடுத்து, 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஓரிரு நாட்களில் இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com