[X] Close

தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Heavy-Rain-in-Western-Guards---Floods-going-in-Kutralam

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழைக் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்காசி குற்றாலம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழையால் முதலில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்கத்தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் லேசாக தண்ணீர் வரத்து மெயின் அருவியில் அதிகரிக்க துவங்கியது. மெயின் அருவியிலும் தண்ணீர் விழத் துவங்கியதும் சுற்றுலாபயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர்.

சற்று நேரத்தில் தண்ணீர் வரத்து மிகவும் அதிகரித்தது பொங்கி விழுந்ததால், அருவியின் அழகை காணவும் அருவிக்கரையில் இருந்து புகைப்படம் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கு முன்பு சுமார் 200 மீட்டர் தொலைவில் கயிறு கட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close