நடிகர் சூர்யா தேசிய கல்வி கொள்கை குறித்து பேசியது தனக்கு தெரியாது என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..? எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” எனக் கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிடட பலர் கருத்து தெரிவித்தனர்.
தனக்கு எதிரான கருத்துக்கு பதில் அளித்த நடிகர் சூர்யா. சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தே, புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து தாம் கருத்துக் கூறியதாக விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், ''நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது. நான் அதை படிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
பெங்களூருவில் பிரதமர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலைகள்.. ஒரே வாரத்தில் பரிதாப நிலை!
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி