ஆர்.டி.ஐ-ல் தவறான தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு மெமோ

ஆர்.டி.ஐ-ல் தவறான தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு மெமோ
ஆர்.டி.ஐ-ல் தவறான தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு மெமோ

மதுரை மாநகராட்சியில் தெருவிளக்கு மின் கட்டணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறுதலாக தகவல் வழங்கிய 4 மண்டல தெருவிளக்கு பிரிவு உதவி பொறியாளர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் உள்ள மொத்த தெருவிளக்குகள் எண்ணிக்கை, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு, பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்காக கட்டப்படும் மின்கட்டணம் எவ்வளவு என்பது குறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் தனித்தனியாக பிரித்து மொத்தம் 53,898 மின்விளக்குகள் உள்ளதாகவும், 4121 கிலோ வாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கான மின் கட்டணமாக கடந்த 1.04.2018 முதல் 1.05.2019 வரை 14 மாதங்களுக்கு 104 கோடியே, 55 லட்சத்து 45 ஆயிரத்து 937 ரூபாய் மின் கட்டணம் செலுத்துவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டண தொகை 92 லட்சத்து, 75 ஆயிரத்து 333 ரூபாய்க்கு பதில் 92 கோடி ரூபாய் என தவறுதலாக தகவல் கொடுத்த மாநகராட்சியின் தெருவிளக்கு பிரிவு 4 உதவிப் பொறியாளர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கணினி ஆப்பரேட்டர் செல்லத்துறையை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் விஷாகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com